பஸ் ஸ்டாண்டில் எம்எல்ஏ வினோத் கண்ணன் திடீர் ஆய்வு!

vellorenow
By
1 Min Read
MLA VINOTH KANNAN

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிய பேருந்து நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை பார்த்த எம்எல்ஏ வினோத் கண்ணன் பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

எம்எல்ஏ வினோத் கண்ணன் கூறுகையில்,”பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளின் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கழிவறையை சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்காக வைக்கப்பட்டுள்ள குடிநீரை குடித்து பார்த்து ஆய்வு செய்யப்பட்டது. கூடுதலாக சில இடங்களில் குடிநீர் குழாய்களை அமைக்க அறிவுறுத்தியுள்ளேன்,”என்றார்.

ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *