“கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவர் ஆகி விட முடியாது” – ஆதவ் அர்ஜூனாவுக்கு சோளிங்கர் என்.ரவி பதிலடி!

vellorenow
By
1 Min Read

சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ( மார்ச் 12) நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாள ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசினார் .

அப்போது,”எம்.ஜி.ஆருக்கு பிறகுரஜினிகாந்த் பிரபலமான தலைவராக மாற நினைத்தார். மாற்றத்தை தரவேண்டும்; சிஷ்டத்தை மாற்ற வேண்டும் என அரசியலுக்கு வர நினைத்தார். ஆனால , திமுக குடும்பம் ரஜினிக்கு பல மிரட்டல்களை கொடுத்து அவரை முடக்கி விட்டனர். எந்த மிரட்டல் வந்தாலும் அஞ்சாமல் இருக்கும் மன வலிமை தவெக தலைவர் விஜய்க்கு உள்ளது. திமுக அரசு பல இன்னல்களை கொடுத்தும் விஜய் அரசியலில் இருந்து பின்வாங்காமல் உள்ளார்,” என பேசியிருந்தார்.

ஆதவ் & ரஜினிகாந்த்

ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி பதிலடி கொடுத்துள்ளார்.

சோளிங்கர் என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ரஜினிகாந்த் அவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே…கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும்,கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை.கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது.

தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும், பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர். பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *