
மேலும், அம்மாநில தேர்தலுக்கு முன்னர் இந்த பணிகளை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் 2ம் கட்டமாக தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்கள் உள்ள 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 4ம்தேதி முதல் எஸ்ஐஆர் பணி தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுக்க வேண்டும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும், ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல என்பதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்பதாக அறிவித்து இருந்தார்.
இதேபோன்று பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
‘மக்களின் வாக்குரிமையை பறிக்க பாஜவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக இது அமைந்துள்ளது’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
இவ்வாறு, தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடந்த மாதம் நவம்பர் 4ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, படிவங்களை கொடுத்து அதை பூர்த்தி செய்து பெற்று வந்தனர். ஆனால் போதுமான ஊழியர்கள் இல்லாததால் ஏற்பட்ட பணி அழுத்தம் காரணமாக சில இடங்களில் அலுவலர்கள் தற்கொலை செ