வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் அரசு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ், ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் மொத்தம் 55 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.